குடவாசல் அருகே ஸ்ரீ நர்த்தன விநாயகர் ஆலய ராஜகோபுர கும்பாபிஷேகம்.. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்..

 திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே அகர ஓகை பகுதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ நர்த்தன விநாயகர் ஆலயத்தின் ராஜகோபுரத்திற்கு அஸ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.. 
  கடந்த 29.03. 2025 அன்று விக்னேஸ்வர பூஜையுடன்  தொடங்கிய யாகசாலை.. அனுக்ஜை பூஜை, நவக்கிரக பூஜை மற்றும் கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது 
தொடர்ந்து.. முதல் கால யாக பூஜை. நடைபெற்று அதனைத் தொடர்ந்து இன்று காலை இரண்டாம் கால யாக பூஜையும் மகா  பூர்ணாகுதி நடைபெற்றது. பிறகு  புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டது.    
 சிவ வாத்தியங்கள்  முழங்க  கடங்கள் ஆலயத்தை வலம் வந்து விமான கோபுரத்தை அடைந்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.. 
தொடர்ந்து ஸ்ரீ நர்த்தன விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்று அலங்கார மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்களும் அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது..
  இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு களித்து விநாயகர் அருளை பெற்றனர்.
Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *