திருச்சி நூலகத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் தமிழக முதலமைச்சருக்கு தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு சார்பில் நன்றி ;-
ஏப்;-02
திருச்சியில் பிரம்மாண்டமாக கட்டப் படும் நூலகத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்டிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தமிழ் நாடுநாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அகரக்கட்டு லூர்து நாடார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
கடந்த 28.7.2023 ம் ஆண்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம், தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் பிரம்மாண்ட நூலகம் ஒன்று கட்டப்பட வேண்டும் என்று தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
திருச்சியில் சுமார் 290 கோடி மதிப்பில் ஏழு தளங்களை கொண்ட உலகத்தரம் வாய்ந்த நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டப்பட்டு வரும் நிலையில் இந்த நூலகத்திற்கு முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பெயரை சூட்டப்படும் என்றும் 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
இந்தநிலையில் தமிழ்நாடு நாடார் உறவின்முறை கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று திருச்சியில் கட்டப்பட்டு வரும் உலகத்தரம் வாய்ந்த நூலகத் திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்டிய தமிழக முதலமைச்சருக்கு தமிழ்நாடு நாடார் உறவின்முறை கூட்டமைப்பின்
சார்பில் கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறோமென
தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.