V. சீராளன் செய்தியாளர் பண்ருட்டி
தமிழ்நாடு காவல் துறையில் 38ஆண்டுகள் மக்களுக்காக சிறப்பாக தொண்டாற்றி பணி ஓய்வு பெறும் காவல் உதவி ஆய்வாளருக்கு மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாராட்டு.
நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியில் இருந்து வரும் காவல் உதவி ஆய்வாளர் தெய்வநாயகம் அவர்களின் பணி இன்றோடு பணி நிறைவு பெறுவதை அடுத்து கடலூர் துணை கண்காணிப்பாளர் அப்பன் ராஜ்
(ஆயுதப்படை) அவர்கள் தலைமையில் பணி நிறைவு பாராட்டு விழா
காராமணி குப்பம் அனு ஐஸ்வர்யா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் சால்வை அணிவித்து பணி நிறைவு காலத்தில் செய்ய வேண்டிய அனைத்து சம்பிரதாயங்களும் செய்து முடித்தார்.மேலும் பணிக்காலத்தில் பரங்கிமலை பயிற்சி கூட்டத்தில் பயிற்சி பெற்ற காவல் அலுவலர்கள் மற்றும் தன்னுடன் பணியாற்றிய எழுத்தர்கள் ஏழுமலை,
அருள் செல்வன், ரகுநந்தன்,
பால தண்டாயுதபாணி, வெங்கடேசன், வடிவேல் மற்றும் காவல் அலுவலர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.