துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூரில் நீர் வளத்துறை அலுவலகம் முன்புறம் ஓங்கார குடில் ஆசான் குருநாதர் தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகளின் முதலாம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு இந்திய ரியல் எஸ்டேட் தரகர்கள் நல சங்கம் சார்பில் துறையூர் சங்கத் தலைவர் பாபு என்கிற அ.சாகுல் அமீது தலைமையில் இரண்டாம் ஆண்டு தண்ணீர் பந்தல் மே-12ந் தேதி துவங்கப்பட்டு ஆறாவது நாள் (மே-17) நவீன் மாஸ்டர் சார்பில் பொது மக்களுக்கு நீர் ,மோர், வழங்கப்பட்டது.
தொடர்ந்து பொதுமக்களுக்கு 30 நாட்கள் நீர் மோர் வழங்கப்படும் என நில தரகர்கள் சங்கத்தலைவர் தெரிவித்தார்.இதில் மாவட்டத் தலைவர் எஸ் திருமுகம் ,செயலாளர் எம்.பி.டி.சி. கண்ணன், பொருளாளர் டிங்கர் செல்வம், துணை செயலாளர் அம்மன் பி. கிருஷ்ணகுமார், துணைத்தலைவர் மீசை பாலு மற்றும் துறையூர் தொகுதி நிலத்தரகர்கள் சங்க செயலாளர் சி ராஜதுரை,பொருளாளர் ஏ.எஸ். செந்தில்குமார், துணை தலைவர் அண்ணாமலை பாலு ,துணை செயலாளர் ஜி. விவேக் மற்றும் நந்தகுமார், ஐ.டி.எஸ்.சரவணன், ஸ்ரீகாந்த், விஜி, ரவிசங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்