திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை பெற்றுள்ளனர். இரண்டு மாணவர்கள் சமூக அறிவியலில் நூற்றுக்கு நூறு எடுத்துள்ளனர். 2018 ஆம் ஆண்டு பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு முதல் முறையாக மாணவர்கள் நூறு சதவீதம் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
இதில் சமூக அறிவியல் பாடத்தில் லோகேஷ் குமார், குணசீலன் ஆகிய இரண்டு மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும் லோகேஷ் குமார் 480, அட்சயா 467, ஜனனிஸ்ரீதேவி 442, ஹாசினி 429, குணசீலன் 427, நந்தினி 420, யுகேஸ்வரன் 406 ஆகிய ஏழு மாணவர்கள் நானூறுக்கு மேல் மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்கள். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் வெற்றிவேலன், ஆசியர்கள் சூரியகுமார், இளையராஜா, ரேணுகா ஆகியோர் பாராட்டினார்கள்.
