இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அஇஅதிமுக பேரூர் கழகம் சார்பில் பூத் கமிட்டி அமைத்தல் மற்றும் பொருப்பாளர்கள் நியமனம் தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ, முனியசாமி, இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர்கள் சுதா கே, பரமசிவன் கழக அமைப்புச் செயலாளர், சுந்தரபாண்டியன், எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர், மலேசியா பாண்டியன் முதுகுளத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், MGR மன்ற துணைச்செயலாளர், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் கண்ணன், முதுகுளத்தூர் பேரூர் கழக பொருப்பாளர் குருசாமி, மற்றும் பேரூர் வார்டு நிர்வாகிகள், சார்பு அணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக முதுகுளத்தூர் வார சந்தை வியாபாரிகள் மற்றும் பொது மக்களுக்கு திமுக அரசின் அவல நிலையை எடுத்து கூறும் வகையில் தெரு முனை பிரச்சாரம் செய்து, துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
