கோவையில் நடைபெற்ற த.வெ.க.பொதுக்கூட்டம்
முன்னனி கட்சிகளுக்கு இணையாக இளைஞர்கள் திரளாக பங்கேற்பு
கோவையில் முதன் முறையாக தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் சுந்தராபுரம் பகுதியில் நடைபெற்றது..
கோவை தெற்கு மாவட்ட தலைவர் விக்னேஷ் தலைமையில் நடைபெற்ற இதில்,பொள்ளாச்சி,கிணத்துகடவு,வால்பாறை உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள்,தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்..
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் துவங்கிய கூட்டத்தில் கட்சியின் கொள்கை உறுதி மொழி வாசிக்கப்பட்டது..
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பேசிய த.வெ.க. கொள்கை பரப்பு இணைச் செயலாளர் லயோலா மணி ,தமிழகத்தில் தொடர்ந்து ஊழல் ஆட்சி நடைபெற்று வருவதாகவும், இதற்கு முடிவு கட்ட தளபதியின் ஆட்சி 2026 ல் கட்டாயம் வரும் என்பதில் மாற்றமில்லை என நம்பிக்கை தெரிவித்தார்..
தமிழகத்தில் டாஸ்மாக்கை ஒழிப்போம் என கடந்த காலங்களில் கூறிய ஆட்சியாளர்கள் தற்போது அதைப்பற்றி ஒன்றும் பேசுவதில்லை என குறிப்பிட்டார்..
த.வெ.க.வை பல கட்சிகளின் பி.டீம் என பேசி வருவதை குறிப்பிட்ட அவர்,தளபதியை இயக்குனர் எச்.வினோத் இயக்கி வருவதாக நகைச்சுவை தெரிவித்தார்..
தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கோவையில் முதன் முறையாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னனி கட்சிகளுக்கு இணையாக தொண்டர்கள் குறிப்பாக இளைஞர்கள் திரளாக ஆர்வமுடன் கலந்து கொண்டது குறிப்பிடதக்கது…