கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை, சார்பாக நடைபெற்ற ஈட் ரைட் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பாதுகாப்பான உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது..
கோவையில் உணவு பாதுகாப்பு, துறை சார்பாக ஈட் ரைட் மேளாக்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி, உணவு பாதுகாப்பு, ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து மக்களிடையே ஏற்படுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை,மற்றும் சி.எம்.எஸ்.கல்லூரி உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்துத் துறை , இணைந்து புரோசோன் மாலில் தெருக்கூத்து கலை வடிவ ஈட் ரைட் பிரச்சாரம் நடைபெற்றது..
இதில் கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை, மாவட்ட நியமிக்கப்பட்ட அதிகாரி, டாக்டர். தமிழ் செல்வன், .எம்.எஸ். கல்லூரி உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து துறை, பேராசிரியர் டாக்டர் திலகவதி, ஆகியோர் கலந்து கொண்டனர்…
இந்த நிகழ்வில் சி.எம்.எஸ். கல்லூரி மாணவர் குழுவால் அரங்கேற்றப்பட்ட ஈட் ரைட் பிரமிட் உருவாக்கம், தெருக்கூத்து, தியேட்டர் நடிப்பு கலை மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு வகையான பாரம்பரிய நடனம் போன்ற பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றன..
இதில் குழந்தைகள் பெரியவர்கள் பெண்கள் பெற்றோர்கள் முதலிய பார்வையாளர்கள் கலந்துகொண்டு , மாணவர்கள் நடத்திப நிகழ்ச்சிகளில் பங்கேற்று சரியான உணவு பாதுகாப்பான உணவு மற்றும் ஆரோக்கியமான உணவு குறித்து தெரிந்து கொண்டனர்..
இதில் சுமார் 2000 த்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் கலந்து கொண்டு பாதுகாப்பான உணவு குறித்து தெரிந்து கொண்டனர்..