கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு வட்டாரக் கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் அச்சுதன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு பாரதிதாசன், பள்ளி மேலாண்மை குழு தலைவி கலா ராணி துணை தலைவி செல்லம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
தலைமையாசிரியர் தமிழ்செல்வி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மருத்துவர் சுவாமிநாதன் சிறப்புரையாற்றினார். கணிதப் பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை ஆண்டறிக்கை வாசித்தார். இந்நிகழ்வில் புரவலர்கள் பிரகாஷ் நரேந்திரன், சாரங்கபாணி வெள்ளாளவிடுதி அரசு உயர்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியர் ஜஸ்டின் திரவியம், அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் மணியரசன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நியூஸ் ராஜேந்திரன், சமூக ஆர்வலர் முருகானந்தம், உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
நிகழ்வினை அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா தொகுத்து வழங்கினார். மாணவர்களின் கண் கவர் கலை நிகழ்ச்சிகளாக வரவேற்பு நடனம், தமிழ், ஆங்கில நாடகம், கட்டபொம்மன் வாழ்க்கை வரலாற்றை சார்ந்து தனி நபர் நடிப்பு, தனிநபர் நடனம், பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை மாணவர்கள் சிறப்பாக செய்து காட்டினார்கள் பொதுமக்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.
ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற தண்ணீர் நிரப்புதல் கபடி போட்டி, சாக்கு ஓட்டம், தவளை ஓட்டம், லெமன் ஸ்பூன் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குஆண்டு விழாவில் பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது. முன்னாள் மாணவர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் வார்டு உறுப்பினர்கள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் இளைஞர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
புதிய புரவலர்களாக ஓய்வு பெற்ற ஆசிரியயை யோகம் பால், சந்திரசேகரன், ராஜலட்சுமி, பழனிவேல், ஜஸ்டின் திரவியம், மணியரசன், வீரலட்சுமி, ராஜ பிரியா உள்ளிட்டோர் புதிய புரவலராக இணைத்துக் கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சிந்தியா, வெள்ளைச்சாமி, நிவின், கணினி உதவியாளர் தையல்நாயகி, தற்காலிக ஆசிரியர் கௌரி உள்ளிட்டோர் செய்திருந்தனர். நிறைவாக ஆசிரியை ஜென்ம ராகினி சகாயக்கில்டா நன்றி கூறினார்.