தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் ஊக்குவிப்பால் வீடுகளில் மாணவர்கள் மரம் வளர்த்து வருகின்றனர்.

இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் கூறுகையில், மரம் வளர்ப்பது என்பது மாணவர்களுக்கு இளமையில் கற்றுக் கொடுப்பதால் அவர்களது வாழ்க்கை முழுவதும் வசந்தம் ஆகும்.
மாணவர்களே மரங்களை பராமரிப்பதன் மூலம் வீடுகளின் அருகில் உள்ளவர்களுக்கு மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வாய்ப்புக்கு வழி பிறந்துள்ளது.
தாங்கள் நட்ட மரம் என்பதால் நிச்சயம் சிறப்பான கவனத்துடன் மரங்களை பராமரிப்பது என்பது நடக்கின்றது.பள்ளியின் இந்த செயல்பாடு ஊக்குவிப்பு பலரது பாராட்டையும் பெற்றுள்ளது .
ஒரே நேரத்தில் மாணவர்கள் பலருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு அதனை நடவும், நடப்பட்ட போட்டோக்களை எடுத்து அனுப்ப கூறினோம்.
மாணவர்கள்தான் நாட்டின் எதிர்கால செல்வங்கள். பசுமையை மீட்டெடுக்கும் பணியை அவர்களிடம் இருந்து ஆரம்பிப்பது தான் சரியாக இருக்கும்.
கொரோனா நேரத்தில் இரண்டாம் அலையில் ஆக்சிஜன் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்துள்ளோம். இலவசமாக ஆக்ஸிஜன் தரும் மரங்களை நாம் ஏன் தவற விட வேண்டும். நன்றாக வளர்ப்போம். அனைவரும் மரங்களை நடவேண்டும்.
எங்கள் பள்ளி இளம் வயது மாணவர்கள் தொடர்ந்து மரங்களை வளர்க்கிறார்கள்.அதனை என்பதை ஆசிரியர்கள் சென்று பார்த்து உற்சாகப்படுத்துவதுடன் , பள்ளியில் பரிசுகளும் வழங்குகின்றோம். என்றார்.