கூடலூர் அருகே பனியன் குடி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் தேனி மாவட்டம் தமிழகம் கேரளாவை இணைக்கும் முக்கிய நகரான கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பணியன்குடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 80 பயனாளிகளுக்கு ரூபாய் 90.01 லட்சம் மதிப்பிலான தமிழக அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் சங்கத்தமிழ் செல்வன் எம்பி ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ. மகாராஜன் முன்னிலையில் வழங்கினார்கள்

இந்த முகாமில் மொபையில் நியாய விலைக்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது மக்களுக்கு தேவையான அத்தியாவாச பொருட்களை வழங்கினார்கள் இந்த முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜ. மகாலட்சுமி தனித்துணை ஆட்சியர் சாந்தி இணை இயக்குனர் வேளாண்மை சாந்தாமணி மாவட்ட சுகாதார அலுவலர் ஜவஹர்லால் துணை இயக்குனர் தோட்டக்கலை நிர்மலா உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் சையது முகமது துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் வட்டார போக்குவரத்து அலுவலர் மாணிக்கம் தாட்கோ மேலாளர் சரளா கூடலூர் நகராட்சி ஆணையாளர் கோபிநாத் வட்டாட்சியர் கண்ணன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கனி கிராம ஊராட்சி ஜெயபிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *