இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வடக்கூர் சாலினி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் 25 ஆம் ஆண்டு சில்வர் ஜுப்ளி விழா டாக்டர், பன்னீர் செல்வம். அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர்களாக வி, சடையாண்டி, வட்டாட்சியர், துரைப்பாண்டியன், என்.சி.சி.ஆபிசர் காவல் ஆய்வாளர் விமலா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், மலைக்கண்ணன், சரவணா மெட்ரிக்குலேசன் பள்ளி முதல்வர் சங்கர், கல்வித்துறை சப்பாணி, முன்னாள் இராணுவம் செல்வநேமிநாதன், ஆசிரியர் முத்துப்பாண்டி,கிராமநிர்வாக அலுவலர் செந்தில் குமார், சந்திரன் ஆசாரி, சாலினி பள்ளி தாளாளர் மணிமேகலை மற்றும் பள்ளி ஆசிரியைகள், உடற்கல்வி ஆசிரியர்கள், ஊழியர்கள், பெற்றோர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர். முருகேசன் சிறப்புரை ஆற்றினார்,
விழாவில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகள் மற்றும் கலைநிகழ்ச்சி, யோகா, கராத்தே, சிலம்பம், ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் சான்று மற்றும் நினைவுப்பரிசுகளை வழங்கி பாராட்டினர், விழாவின் முடிவில் சாலினி பள்ளியின் முதல்வர் விஜயராணி நன்றியுரை ஆற்றினார்