மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பஸ்ஸ்டாண்டில் ஆக்கிரமிப்புகள்….. அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை…..
மதுரை மாட்டுத்தாவணி எம். ஜி. ஆர். பஸ் ஸ்டாண்டில் மீண்டும் முளைத்த ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பஸ்ஸ்டாண்டில் பல்வேறு பகுதிகளுக்கு என தனித்தனியாக ‘பஸ் ‘பே’ பிளாட்பாரங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த பஸ் ஸ்டாண்டிற்கு நாள்தோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களை அழைத்து செல்லவும் உறவினர்கள், நண்பர்கள் தினமும் வந்து செல்கின்றனர். இங்கு பிஸ்கட் உள்ளிட்ட ஸ்நாக்ஸ் கடைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பலர் அனுமதித்த கடையின் அளவை விட கூடுதலாக கடைகளை ஆக்கிரமித்து நடத்தி வருகின்றனர். பயணிகள் நடந்து செல்லும் பிளாட்பாரங்களை
யும் ஆக்கிரமித்து கடைகளை வைத்துள்ளனர். இதனால் பயணிகள் செல்ல முடியாமல் இடையூறு ஏற்பட்டு வருகிறது.
இந்த ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது அகற்ற நடவடிக்கை எடுத்தாலும் அவை மீண்டும் மீண்டும் முளைத்து விடுகின்றன. மாநகராட்சி அதிகாரிகள் நேற்று திடீரென ஆய்வு செய்தனர். அப்போது பிளாட்பாரங்களை
யும் ஆக்கிரமித்து வைத்துள்ள கடைகளை பார்த்து நாளை அகற்றா விட்டால் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்..