துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள நாகலாபுரத்தில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.நேற்று முன்தினம் (மார்ச் 25) அரியலூரில் இருந்து கேரளா செல்வதற்காக டேங்கர் லாரி ஒன்று நாகலாபுரம் செக்போஸ்ட்டில் பேரிகார்டை கடந்தது.பேரிகார்டை வேகமாக கடக்கும் போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் எதிரே வந்த நாகலாபுரத்தை சேர்ந்த சரவணன் மனைவி செந்தில் வடிவு மீது விழுந்து கால் முறிவு ஏற்பட்டது.உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெரம்பலூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்த துறையூர் இன்ஸ்பெக்டர் முத்தையன் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் விழுப்புரம் மாவட்டம் ராமநாதபுரத்தை சேர்ந்த குமார் என்பது தெரியவந்தது.
அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய டிரைவர் குமார் தப்பி ஓடி விட்டதாக தெரிகிறது.துறையூர் போலீசார் கிரேன் உதவியுடன் லாரியை மீட்டு அப்புறப்படுத்தி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பெரம்பலூர் சென்னை சாலையில் எப்போதும் அதிக வாகனங்கள் வந்து கொண்டிருக்கும்.அதிஷ்ட வசமாக அந்த நேரத்தில் காரோ, பேருந்தோ எதிரே வரவில்லை, இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்