அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத கல்வித்துறை இயக்குனரை கண்டித்து தனியார் பள்ளி ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
புதுச்சேரியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் நிரந்தர பணியிடங்களில் தொகுப்பூதியம் பெற்று பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்களை பணிநிரந்தரம் செய்து சம்பளம் வழங்க வேண்டும், என்ற சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பை அமல்படுத்தாமல் தாமதப்படுத்தும் கல்வித்துறை இயக்குனரை கண்டித்து கல்வித்துறை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஊழியர்கள் சங்க சம்மேளன கௌரவ தலைவர் பிரேமதாசன் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டம்தில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள்,ஊழியர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.