பெருமாளை இழிவு படுத்தி பாடல் அமைத்துள்ள நடிகர் சந்தானம் மீது கோவையில் இந்து முன்னனி அமைப்பினர் காவல் துறையில் புகார்

இந்து மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் “டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படத்தில் கோவிந்தா கோவிந்தா என்ற வார்த்தையை தவறாக சித்தரித்து வெளியிட்ட நடிகர் சந்தானம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கோவை மாநகர இந்து முன்னனி அமைப்பினர் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்..

கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னனி தலைவர் தசரதன் தனது ஆதரவாளர்களுடன் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு வந்து, காவல் துறை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்துள்ளார்.

மனுவில் இந்து மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும், வழிபாட்டு முறையை சிதைக்கின்ற நோக்கத்திலும் “டிடி நெக்ஸ்ட் லெவல்”என்ற திரைப்படத்தில் கோவிந்தா, கோவிந்தா என்ற முழக்கத்தை இழிவாக சித்தரித்து பாடியுள்ளனர்.

ஆகவே இந்து மதத்தையும் இந்து மத கடவுளான பெருமாளையும் இழிவுபடுத்தி பாடல் வெளியிட்ட டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தில் தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட நடிகர் சந்தானம் ஆகியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் அவர் தெரிவித்துள்ளார்..

இதில் அவருடன் கோவை கோட்ட பொதுச் செயலாளர் பாபா கிருஷ்ணன் மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால் மாவட்ட செயலாளர் மகேஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *