தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

குண்டடம் அருகே திமுக சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம்.

திருப்பூர் தாராபுரம் குண்டடம் அடுத்த எரகாம்பட்டியில் தி.மு.கவின் நான்கு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க குண்டடம் மேற்கு ஒன்றிய திமுக சார்பாக சடையபாளையம் ஊராட்சி எரகாம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் நான்காண்டு சாதனை குறித்து விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு குண்டடம் மேற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். தலைமை பொதுக்குழு உறுப்பினர் கே. எஸ். கருணாகரன் முன்னிலை வகித்தார்.

அமைச்சர் கயல்விழி செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.தி.மு.க தலைமை கழக பேச்சாளர் சஹா விக்னேஷ் கலந்து கொண்டு கழக அரசின் சாதனைகளை விளக்கி பேசினார்.

இதில் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சிவசெந்தில்குமார், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் மயில்சாமி, மாவட்ட கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் முத்துக்குமார், மாவட்ட விவசாய அணி துணை தலைவர் ஈஸ்வரன் ,மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சோமசுந்தரம், மாவட்ட ஐ டி பிரிவு ஆனந்தி, மாவட்ட மருத்துவ அணி துணை அமைப்பாளர் இந்திராணி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் குமரவேல், மகேந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், மனோகரன், தங்கவேல், ஒன்றிய கழக நிர்வாகிகள் . அர்ச்சுனன், பாலசுப்பிரமணி, விஸ்வநாதன்,முருகேசன், கிருஷ்ணமூர்த்தி, பாலசுப்பிரமணி, ரகுநாதன், ராணா பத்மநாபன், மணிவேல், செந்தில்,பெரியசாமி, சசிகுமார், மகேஸ்வரன், முத்துவடுகநாதன், சின்னதுரை, செல்வம் உள்ளிட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பின் முன்னாள் பிரதிநிதிகள், பொதுமக்ள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *