விருத்தாசலம்,
பெண்ணாடம் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ரவிக்குமார் (வயது 42). இவர் ஏழுமலையான் நகரில் தனி வீடு ஒன்று வாடகைக்கு எடுத்து அதில் பாண்டிச்சேரி மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக விருத்தாசலம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாரக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போது அரசு அனுமதி இன்றி பாண்டிச்சேரி மதுபான பாட்டில்களை கடத்தி வந்து வீட்டில் வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அதன் பேரில் போலீசார் 122 மது பாட்டில்களை பறிமுதல் செய்து ரவிக்குமாரை பிடித்து விருத்தாசலம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.