விருத்தாசலம்
விருத்தாசலம் கோட்டாட்சியராக பணிபுரிந்து வந்த சையத் மெஹ்மூத் சென்னை சமூக பாதுகாப்பு திட்டத்தின் தனி துணை ஆட்சியராக பணி மாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து வேலூரில் கோட்டாட்சியராக பணிபுரிந்து வந்த விஷ்ணு பிரியா அங்கிருந்து மாற்றம் செய்யப்பட்டு விருத்தாசலம் கோட்டாட்சியராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிதாக கோட்டாட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட விஷ்ணு பிரியா அவர்களுக்கு கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வமணி தாசில்தார்கள் விருத்தாசலம் உதயகுமார், துணை வட்டாட்சியர்கள் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்