தமிழக வெற்றிக் கழகம் கோவை புறநகர் கிழக்கு மாவட்டம் சுல்தான் பேட்டை ஒன்றியம் சார்பாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் ரம்ஜான் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

சூலூர் ஜூம்மா மசூதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏழை எளிய மக்களுக்கு பிரியாணி கிட்,புத்தாடைகள் வழங்கப்பட்டது தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தமிழகம் முழுவதும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில்,தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தளபதி ஆணைக்கிணங்க அகில இந்திய பொதுச் செயலாளர் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் ஆனந்த் அவர்களின் அறிவுறுத்தலின்படி, கோவை புறநகர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சூலூர் சட்டமன்ற தொகுதி சுல்தான் பேட்டை ஒன்றியம் சார்பாக சூலூர் ஜும்மா மசூதியில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் ரம்ஜான் பண்டிகை நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது..

சுல்தான்பேட்டை ஒன்றியம் அக்‌ஷயாஸ் பிரகாஷ்,தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,சிறப்பு விருந்தினராக கோவை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் S பாபு கலந்து கொண்டு இப்தார் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்..

இதில் நோன்பு திறப்பதற்கான ஆரம்ப உணவாக கஞ்சி,பேரீச்சை மற்றும் குளிர்பானங்கள்,பழங்கள் வழங்கப்பட்டது..

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக லெனின் கருப்புசாமி மற்றும் சன் ஸ்மார்ட் சாகுல் ஆகியோர் கலந்து கொண்டு ரம்ஜான் நலத்திட்ட உதவிகளை வழங்கினர் இதில் ரம்ஜான் பண்டிகை நலத்திட்ட உதவிகளாக பிரயாணி கிட் மற்றும் பெண்களுக்கு சேலை வழங்கப்பட்டது..

இந்நிகழ்ச்சியில்,சூலூர் ஜும்மா மசூதி பள்ளி வாசல் நிர்வாகிகள் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கிழக்கு புறநகர் மாவட்ட பல்வேறு நிலை நிர்வாகிகள்,மோகன்,தமிழ்மணி,முருகேஷ்,குணா,லயாரவி,பிரகாஷ்,செல்வம்,ராஜ்குமார்,அன்பு உட்பட கழக இளைஞர் அணி, மகளிர் அணி,மாணவரணி,தொண்டர் அணி என பலர் கலந்து கொண்டனர்…

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *