வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பச்சமலையில் உள்ள கோம்பை ஊராட்சியை சேர்ந்த தாளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மார்ச் 22 ந் தேதி பள்ளி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் ந.முருகேசன் வரவேற்புரை ஆற்றினார். துறையூர் வட்டார கல்வி அலுவலர் கு.மார்ட்டின் குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இவ்விழாவில் துறையூர் வட்டாரக் கல்வி அலுவலர் -2, சி.அருள்தாஸ் நேவிஸ்,வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) பொ.புககேழந்தி, கிராம மூப்பன் ராஜேந்திரன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ச.மகாலட்சுமி,ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
பள்ளி ஆசிரியர் த.பாலகுமார் ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மிக சிறப்பாக நடைபெற்றது. முதல் வகுப்பில் சேர்ந்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாணவ மாணவிகளுக்கு வட்டார கல்வி அலுவலர் மார்ட்டின், பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
இதில் ஆசிரியர் பயிற்றுநர்கள் ந.இராஜசேகரன், ராகவன், பொன்னம்பலம் பட்டி தலைமை ஆசிரியர் பா.செல்வம் கொத்தம்பட்டி பட்டதாரி ஆசிரியர் யோ.வாசுதேவன் மதுராபுரி ஆசிரியர் வீ.ரமேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர். முன்னாள் வார்டு உறுப்பினர் சங்கீதா,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தே.மகாலட்சுமி,பள்ளி மேலாண்மைக் குழு துணைத் தலைவர் செ.தங்கமணி ஆகியோர் பாராட்டுரை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் மேலாண்மைக்குழு முன்னாள் தலைவர் மா.பரிமளா நன்றியுரை ஆற்றினார்.இதில் பெரம்பலூர் மாவட்ட பாலியல் வன்கொடுமை தடுப்புக்குழு உறுப்பினர் தி.சத்யா பள்ளி மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கினார்.விழாவில் சத்துணவு அமைப்பாளர் அன்பரசி,சமையல் உதவியாளர் ச.ஜெயா,தூய்மை பணியாளர் ராணி,ஐடிகே தன்னார்வலர் கா. கஸ்தூரி, காலை உணவுத் திட்டம் ர.சுதா,ர.நதியா மற்றும் கலை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய கா.கஸ்தூரி பள்ளி ஆசிரியர்கள், மாணவ -மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.