கோட்டை தமிழ்ச் சங்கம் நடத்திய உலக கவிதை திருவிழாவில் கவிஞர்களுக்கு சான்றிதழ்…!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் உலக கவிதை தினத்தையொட்டி கவிஞர்கள் பங்கேற்ற கவிதை திருவிழா ஆசியன் இன்சிடிடியூட் வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சங்க தலைவர் பீ.ரகமத்துல்லா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பா. சீனிவாசன் முன்னிலை வகித்தார். செயலாளர் இரா.பாஸ்கரன் வரவேற்றார்.
கவியரங்கத்தின் நடுவராக சாகித்திய அகாதெமி பால புரஸ்கார் விருது பெற்ற கவிஞர் மு.முருகேஷ் பங்கேற்று, கவிதைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை பற்றியும், கவிதைகளின் தன்மைகள் குறித்தும் விளக்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 30 க்கும் மேற்பட்ட கவிஞர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கவிஞர்கள் பூங்குயில் சிவக்குமார், காவல்துறை மா.கதிரொளி, பேராசிரியர் உ.பிரபாகரன், வை.தங்கராசு, முனைவர் ம.மகாலட்சுமி, சா.ரஷீனா, வந்தை பிரேம், வந்தை குமரன், தலைமை ஆசிரியர்கள் க.வாசு, இரா. அருள் ஜோதி, சங்கர், ரயில்வே சு.தனசேகரன், ஆசிரியை அ.பூவிழி, ஜா.தமீம், கேப்டன் பிரபாகரன், இர.பிரபாகரன், ச.தஞ்சி, த.கௌசல்யா, தே.புவனேஸ்வரி , ஜான் பீட்டர், வருவாய் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி, செல்வி சஹானா, சமூக ஆர்வலர் பொன்னம்பலம் உள்ளிட்ட கவிஞர்கள் பங்கேற்று கவிதைகளை வாசித்தனர். மேலும் கலைச் சுடர்மணி பெ.பார்த்திபன், தென்னாங்கூர் ரஜினி ஆகியோரின் தமிழிசை பாடல்கள் பாடப்பட்டது. நிகழ்வை சங்க உறுப்பினர் கு.சதானந்தன் தொகுத்து வழங்கினார். இறுதியில் சங்க பொருளாளர் சீ.கேசவ ராஜ் நன்றி கூறினார்.
செய்தியாளர்: பா. சீனிவாசன் வந்தவாசி.