அரியலூரில் அமைச்சர் சா.சி.சிவசங்கரின் 56வது பிறந்த நாளினை முன்னிட்டு தொ.மு.சா. வினர் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து அன்ன தானம் வழங்கல்.
அரியலூர் மாவட்ட திமுக செய லாளர், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சா. சி. சிவசங்கரின் 56வது பிறந்த நாளை முன்னிட்டு, அரசு போக்குவரத்து கழக அரியலூர் பணிமனை தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் சார்பில் , அரியலூர் அருள்மிகு ஸ்ரீ கோதண்ட ராமசாமி பெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள சுவாமி பெருமாளிடம் போக்கு வரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பெயரில் நீண்ட ஆயுள் பெற சிறப்பு வழிபாடு செய்து ,ஏழை எளியோர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது.
முன்னதாக, ராஜாஜி நகரிலுள்ள,சாந்தம் முதியோர்
இல்லத்தில்,50க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியவர் களுக்கு,போக்குவரத்து துறை அமைச்சர் சா சி சிவசங்கர் பிறந்த நாளை முன்னிட்டு அரசு போக்கு வரத்து கழக பணிமனை தொமுச நிர்வாகிகள் சார்பில் காலை சிற்றுண்டி,வழங்கப்பட்டன.அதனைத் தொடர்ந்து, அரசு போக்குவரத்து கழக பணிமனை கேட் முன்பு, தொமுச நிர்வாகிகள் திரண்டு ,போக்கு வரத்து துறை அமைச்சர் பிறந்தநாள் கொண்டாடும் விதமாக பணிமனைத் தொழிலாளர் களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கி கொண் டாடினர்.இந்நிகழ்ச்சியில் அரியலூர் அரசு சிமெண்ட் ஆலையின் தொமுச செயலாளர், தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் ஆர் மகேந்திரன், அரசு போக்குவரத்து கழக பணிமனை யின் தொமுச செயலாளர் பிவி அன்பழகன், தொ.மு.ச தலைவர் கனகராஜ், பொருளாளர் பழனிச் சாமி, துணைச் செயலாளர் சாமிநாதன், துணைத் தலைவர் செல்வகுமார், பொதுக்குழு உறுப்பினர்கள் நடராஜன் ,ரமேஷ்,
ஆசைத்தம்பி, இளங்கோவன் தன்ராஜ் ,சித்திரவேல், ,அரசு சிமெண்ட் ஆலையின் கௌரவர் தலைவர் எம். அன்பழகன், தொமுச தலைவர் கே.சின்னையன், பொருளாளர் அந்தோணி சாமி,தொமுச நிர்வாகிகள் மைனர்,கணேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.