தமிழக வெற்றிக் கழகம் கோவை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக 20 க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்கள் தாகம் தீர்க்க நீர் மோர் பந்தல் அமைப்பு
தமிழக வெற்றி கழகம் துவங்கி ஒராண்டை கடந்த நிலையில் அன்றாடம் பொதுமக்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண த.வெ.க.தொண்டர்களுக்கு கட்சியின் தலைவர் விஜய் ஆணையிட்டுள்ளார்…
இந்நிலையில் கோடை காலம் துவங்கியதை அடுத்து பொதுமக்கள் தாகம் தீர்க்க ஆங்காங்கே நீர் மோர் பந்தல்கள் அமைப்பதில் த.வெ.க.வினர் தீவிரம் காட்டி வருகின்றனர்..
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தளபதி ஆணைக்கிணங்க அகில இந்திய பொதுச் செயலாளர் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் ஆனந்த் அறிவுறுத்தலின்படி, கோவை புறநகர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் நீர் மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு மோர்,தண்ணீர்,பழங்கள் வழங்கப்பட்டன…
அதன் படி முதலாவதாக ஒண்டிப்புதூர் கதிர் மில்ஸ் அருகே அஸ்வின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை கிழக்கு புறநகர் மாவட்ட செயலாளர் பாபு திறந்து வைத்தார்..
இதனை தொடர்ந்து புறநகர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சுல்தான் பேட்டை,இருகூர்,இடையர்பாளையம்,கண்ணம்பாளையம்,சாமளாபுரம்,முத்துகவுண்டன்புதூர்,கருமத்தம்பட்டி என இருபதிற்கும் மேற்பட்டு பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தல்களை கிழக்கு புறநகர் மாவட்ட தலைவர் பாபு திறந்து வைத்தார்..
இந்நிகழ்ச்சியில், மாவட்ட கழக நிர்வாகிகள் இணைச் செயலாளர் சபரீஷ் பொருளாளர் சரவணகுமார் துணைச் செயலாளர் மோகனப்பிரியா செயற்குழு உறுப்பினர்கள் ராஜா வினோத்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் சுல்தான்பேட்டை அக்ஷயாஸ் பிரகாஷ் சரவணன் கனியூர் பாலு விக்னேஷ் இளையராஜா வெங்கடேஷ் ஜெயச்சந்திரன் நவீன் கௌதம் அரசூர் நவீன் கௌதம் சந்தோஷ் கௌதம் மகளிரணி நிர்வாகிகள் இராஜேஸ்வரி அரோகியரமீலா உட்பட இளைஞரணி,மாணவரணி,மகளிர் அணி என கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள்,பொதுமக்கள் என பலர் திரளாக கலந்து கொண்டனர்…