பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
தஞ்சை மாவட்டம் திருப்பாலைத்துறை பாலைவனநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை மாத பௌர்ணமி பிரம்மோற்சவ முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் …..
1000-திற்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் ….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் திருப்பாலைத்துறையில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான வரலாற்று சிறப்புமிக்க தவள வெண்ணகையாள் பாலைவனநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை மாத பௌர்ணமி பிரமோற்சவ விழா கடந்த
1 ஆம் தேதி தொடங்கி 17 ஆம் தேதி வரை வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு தவள வெண்ணகையாள் பாலைவனநாத சுவாமிக்கு சிறப்பு மலர் அலங்காரத்தில் யாக பூஜைகள் செய்துமேள தாளங்கள் முழங்க வானவேடிக்கையுடன் பக்தர்கள் முன்னிலையில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் திருக்கல்யாணத்தை காண வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தாலி கயிறு மாற்றிக்கொண்டனர்.
திருக்கல்யாணம் முடிந்தவுடன் சாமிக்கு மகா தீபாரதனை நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் விக்னேஷ், ஆய்வாளர் லெட்சுமி, திருப்பாலைத்துறை சிவப்பேரவை அன்பர்கள் கிராமவாசிகள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்து வழிபட்டனர் .