திருவையாறு வட்டாரத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் கீழ் செயல்படும் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் சார்பாக அங்கன்வாடி மையத்தில் முன்பருவக்கல்வி படித்த அனைத்து குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
2024-2025 கல்வியாண்டில் முதல் பருவத்தை முடித்த 110 அங்கன்வாடி குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா திருவையாறு ஶ்ரீனிவாச ராவ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெனிட்டா லூசியா மேரி தலைமை வகித்தார்,
வட்டார ஒருங்கிணைப்பாளர் ஆனந்தி அனைவரையும் வரவேற்று பேசினார், பள்ளியின் தாளாளர் ரஞ்சன் கோபால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 110 குழந்தைகளுக்கு பட்டம் வழங்கி பாராட்டினார்,
நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர தேவி, மேற்பார்வையாளர்கள் கலா, தேன்மொழி, குழந்தைகள் பெற்றோர்கள், அங்கன்வாடி பணியாளர்கள்,பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.