அன்னதானம்” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், லியானா குரூப்ஸ் சார்பிலும் இணைந்து திண்டுக்கல் தேவி, திருநெல்வேலி பொன்னுசாமி, சமூக சேவகர் ஸ்ரீகாந்த் பாலையா, நத்தம் ஆசிரியர் முருகன் அவர்களின் நல்லாசியுடன் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மற்றும் தேரோட்டத்தை முன்னிட்டு அனைவருக்கும் 501 லட்டுகளும், 501 குளிர்பானமும், 501 தாலி கயிறு, மஞ்சள் கிழங்கு, சந்தனம், குங்குமம், சாக்லேட் இணைந்து 501 நபர்களுக்கும், வாட்டர் பாட்டில் 1,005 நபர்களுக்கும் வழங்கப்பட்டது.
விழாவில் நடிகர் மீசை மனோகரன், பலவசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி, எழுத்தாளர் விவேக் ராஜ், அறிமுக நடிகர் வைத்தியலிங்கம், மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா, சுல்தான் அம்மா, நடிகை முனிஸ்வரி, குழந்தை நட்சத்திரம் ரிஷிதா மற்றும் நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்டனர்.