கோவையில் கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைத்த சமூக நல்லிணக்க இப்தார் விருந்து
தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகமது ரபி பங்கேற்பு கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி பிரதர் ஹூட் (BROTHER HOOD) சார்பாக இப்தார் என்னும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி கோவை குனியமுத்தூர் தனியார் மண்டப அரங்கில் நடைபெற்றது..
கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைத்த இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகமது ரஃபி மற்றும் கவுரவ அழைப்பாளராக கல்லூரி முதல்வர் முனைவர் ஜக்ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர்…
விழாவில் பேசிய முகமது ரஃபி,இது போன்ற நிகழ்ச்சிகள் நமது நாட்டின் பன்முகதன்மையை காட்டுவதாக கூறிய அவர், கல்லூரி மாணவர்களிடையே வேற்றுமையை மறந்து ஒற்றுமையை ஏற்படுத்தும் என தெரிவித்தார்…
தொடர்ந்து பேசிய அவர்,பெற்றோர்களை நல்லபடியாக கவனித்தால் மட்டுமே வாழ்வில் ஒவ்வொருவரும் வெற்றி பெற முடியும் என கூறினார் தொடர்ந்து நடைபெற்ற இப்தார் விருந்தில் கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர் அனைவருக்கும் பேரீச்சை பழம்,நோன்பு கஞ்சி மற்றும் பிரியாணி பரிமாறப்பட்டது..
நிகழ்ச்சியில் பல்சமய நல்லுறவு இயக்க மாநில மாவட்ட நிர்வாகிகள் அபுதாகீர்,வழக்கறிஞர் இஸ்மாயில்,அபுதாகீர்,கோட்டை செல்லப்பா, கோவை தல்ஹா மற்றும் பலர் உடனிருந்தனர்…