கோவை கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் பகுதியில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 25வது ஆண்டு விழா ஜீரோ-ஜி’25 என்ற பெயரில் நடைபெற்றது.
கல்லூரி முதன்மை செயல் அலுவலர் அனுஷா ரவி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், இந்திய கப்பல் படையின் ஓய்வு பெற்ற கமாண்டர்,மற்றும் பிரபல நடிகை பிரியா வாரியார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்..
விழாவில் கலந்து கொண்ட ஓய்வு பெற்ற கப்பல் படை அதிகாரி மாணவ,மாணவிகளிடையே கலந்துரையாடினார்..
அப்போது, பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்ற முனைப்புடன் பாகிஸ்தானுடன் போரிட்டு வரும் இந்திய ராணுவ வீர்ர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படக்கூடாது ஒரு உயிரிழப்பு கூட நிகழக் கூடாது என அனைவரும் இரண்டு நிமிடம் எழுந்து நின்று அமைதியாக பிரார்த்திக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டதை எடுத்து விழாவில் பங்கேற்ற அனைவரும் எழுந்து நின்று ராணுவ வீரர்களுக்காக பிரார்த்தனை செய்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பிரபல நடிகை பிரியா வாரியார் கலந்து கொண்டு பேசினார்..
அப்போது பேசிய அவர், தனக்கு நடிகர் அஜித் குமாரை மிகவும் பிடிக்கும் எனவும் அவரது படத்தில் நடித்தது மிகப்பெரிய ஒன்று என்றும் கூறினார்.
மலையாளம் மற்றும் தமிழ் இன இரண்டு மொழிகளுமே தனக்கு தெரியும் என்பதால் எந்த ஒரு வித்தியாசமும் தனக்கு தெரியவில்லை எனவும் தமிழ் தனக்கு மிகவும் பிடிக்கும் எனவும் கூறியதுடன் குட் பேட் அக்லி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்திருந்தாலும் எதிர்பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய வரவேற்பை தமிழக மக்கள் தந்திருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இதை அடுத்து கல்லூரியில் சிறப்பாக செயல்பட்ட கல்லூரி ஊழியர்கள் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது..