கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் ஒன்றியம் என். தட்டக்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று ஆண்டுவிழா நடைபெற்றது.இவ்விழாவிற்கு ஊர் கவுண்டர் சக்கரவர்த்தி மற்றும் காவேரிப்பட்டிணம் வட்டார கல்வி அலுவலர் சபிக்ஜான் அவர்கள் தலைமை தாங்கினார்.
கி வீரமணி ஆசிரியர் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக நாகோஜனஅள்ளி பேரூராட்சி தலைவர் தம்பிதுரை மற்றும் துணைத் தலைவர் குமார் முன்னிலை வகித்தனர் விழாவில் மாணவர்களின் பன்முகதிறன்களை வளர கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இவ்விழாவின் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது தொடர்ந்து. பள்ளியின் ஹைடெக் லேப் திறக்கப்பட்டது.
விழா இறுதியாக பள்ளியின் ஆங்கில ஆசிரியர் ரவி நன்றி உரையை ஆற்றினார். மேலும் பள்ளியில் புதியதாக இந்த ஆண்டு தட்டக்கல் பகுதியை சேர்ந்த பொது மக்கள் தங்கள் குழந்தைகளை ஆர்வத்துடன் 1-ம் வகுப்பில் பள்ளியில் சேர்ந்தனர். பள்ளியின் ஆண்டு விழா நிறைவடைந்தது.
இந்த நிகழ்ச்சியில் இப்பள்ளியின் ஆசிரியர்கள் ரகுநாதன், வீரமணி, நீலமேகன், ரேவதி, ரவி, கோமதி உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்