துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரை ஶ்ரீ பாக்கியலட்சுமி ஏ/சி மஹாலில் 30/03/2025 அன்று நாயுடுகள் நல சங்கம் சார்பில் 17 ஆம் ஆண்டு முப்பெரும் விழா ( யுகாதி விழா, குடும்ப விழா, மகளிர் தின விழா) பிரமாண்டமாக நடைபெற்றது.
நாயுடுகள் நல சங்க தலைவர் “பாக்யா”ஜி.கிருஷ்ண மூர்த்தி நாயுடு தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் திருச்சி மாவட்ட பொது செயலாளர் ராஜாராம் நாயுடு, ஜெயராமன் நாயுடு,ராம்ராஜ் நாயுடு முன்னிலை வகித்தனர்.
முனைவர் டாக்டர் கிருஷ்ணராஜ் நாயுடு விழா பேருரை ஆற்ற,ரோவர் வரதராஜ் நாயுடு வாழ்த்துரை வழங்கினார். விழாவில் நாயுடு இன பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற நாயுடு இன மாணவ மாணவிகளுக்கு பரிசுத்தொகை வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
விழாவில் துறையூர் நகர துணை தலைவர்கள் நாகராஜன் நாயுடு, ரங்கராஜ் நாயுடு,சுந்தர்ராஜ் நாயுடு, துணை செயலாளர்கள் பி கிருஷ்ணகுமார் நாயுடு, ஸ்ரீதர் நாயுடு, ஜெயக்குமார் நாயுடு ,திருச்சி மாநகர,மாவட்ட சங்க நிர்வாகிகள், பொன்மலை,கே கே நகர், பெரம்பலூர், லால்குடி, முசிறி, மணப்பாறை உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி தலைவர் வி கே வெங்கட்ராமன் நாயுடு ,செயலாளர் இளைய ராஜேந்திரன் நாயுடு, பொருளாளர் வி.பி.பிரபாகரன் நாயுடு,மகளிர் அணி தலைவர் பி இந்திராணி பெருமாள் நாயுடு, கௌரவத் தலைவர் பத்மாவதி சௌந்தரராஜன் நாயுடு, செயலாளர் வி சமந்தாமணி வேணுகோபால் நாயுடு, பொருளாளர் சரஸ்வதி ரங்கராஜ் நாயுடு மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள்,செயற்குழு உறுப்பினர்கள், இளைஞர் அணியினர், வழக்கறிஞர் அணியினர், துறையூர் மற்றும் தாலுக்கா, சுற்று வட்டார கிராம சங்க நிர்வாகிகள் மற்றும் ஏராளமான நாயுடு இன சொந்தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா நிகழ்ச்சிகளை வி கே வெங்கட்ராமன் நாயுடு, அழகு நாச்சியார் ராஜேந்திரன் நாயுடு ஆகியோர் சிறப்பாக தொகுத்து வழங்கினர்.விழா நிறைவில் ஜெயராமன் நாயுடு நன்றியுரை ஆற்றினார்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்