கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.
பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா……..

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ளது பல்லடம் அரசு தாலுக்கா மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கு மேற்பட்ட உள் மற்றும் வெளிநோயாளிகள் வந்து செல்வது வழக்கம். இந்த அரசு மருத்துவமனை வளாகத்தில் அவசர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் வார்டு, பெண்கள் வார்டு என பல்வேறு பிரிவுகள் உள்ளன. இதனிடையே ஒவ்வொரு வார்டின் முன் புறமும் அதிக அளவில் பிளாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. மேலும் இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் அரசு மருத்துவமனையி லேயே இதுபோல் அவள நிலை காணப்படுவதாகவும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். நகராட்சி நிர்வாகம் உடனடியாக பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தேங்கி இருக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.