கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஸ்கூல் ஆஃப் மார்ஷியல் ஆர்ட் டிரஸ்ட் கராத்தே பள்ளியின் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசு,பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் பெல்ட் டெஸ்ட் நிகழ்ச்சி ஓசூர் சரஸ்வதி நகர் லே-அவுட் பேகேபள்ளியில் மார்ச் 30 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தலைமை மாஸ்டர் கியோஷி. சியாபுதின்.KK 8th டான் பிளாக் பெல்ட் அவர்கள் மாணவ, மாணவிகளுக்கு தற்காப்பு கலை சம்பந்தமாக சோதனை நடத்தி மாணவ, மாணவிகளை தேர்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரு.மகேஷ் ஸ்ரீ எவர்கிரீன் பயோடெக் நிறுவனத்தின் உரிமையாளர் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பெல்ட் வழங்கினார். தஸ்விந்தன், தானிஷ், சாத்விக்கா ஆகியோருக்கு கியோஷி. சியாபுதீன் அவர்கள் பிளாக் பெல்ட் வழங்கி பாராட்டினார்.
இந்த சிறப்பான நிகழ்ச்சியை ஸ்கூல் ஆப் மார்ஷியல் ஆர்ட் டிரஸ்ட் கராத்தே பள்ளியின் தலைவரும் தலைமை பயிற்றுவிப்பாளருமான ரென்சி. ரோஸ் டியோஜின் 5th டான் பிளாக் பெல்ட் அவர்கள் சிறப்புற ஏற்பாடு செய்திருந்தார்.
நிகழ்ச்சியின் நிறைவாக திரு.ராமநாதன் அவர்கள் நன்றி கூறி நிகழ்வை நிறைவு செய்தார். இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் அவர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் திரளாக பங்கு பெற்றனர். தற்காப்புக் கலையில் பங்கு பெற்று தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளை அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர்.
செய்தியாளர்
ஜி.பி. மார்க்ஸ்