குடவாசல் அருகே பழமை வாய்ந்த லட்சுமி நாராயண பெருமாள் ஆலய கும்பாபிஷேகம்.. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்..
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள வேம்பனூர் கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் பழமை வாய்ந்த லட்சுமி நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் காலை விமர்சையாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை அன்று முதல் யாகசாலை பூஜைகள் துவங்கி நடைபெற்று வந்தது.
வேத மந்திரங்கள் முழங்க மங்களப் பொருட்களை ஹோம குண்டங்களில் சமர்ப்பித்து மூன்று தினங்களாக பல்வேறு கட்டங்களாக பூஜைகள் நடத்தப்பட்டது.
காலை யாகசாலையில் பூர்ணஹூதி நடத்தப்பட்டு புனித நீர் அடங்கிய குடங்கள் புறப்பட்டு, மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து கோபுர விமானத்தை சென்றடைந்தது. தொடர்ந்து கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை வேம்பனூர் கிராமத்தில் உள்ள முக்கியஸ்தர்கள் மற்றும் கிராமவாசிகள் ஏற்பாடு செய்து இருந்தனர்.
விழாவில் சிட்டி யூனியன் வங்கியின் நிறுவனர் பாலசுப்ரமணியன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாப்பா சுப்ரமணியன் தமிழ் மாநில காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் குடவாசல் தினகரன் மாவட்ட செயலாளர் மணக்கால் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.