கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.

பல்லடம் அருகே வெண்கலத்தால் ஆன சுவாமி சிலையை திருடிய வடமாநில சிறுவன் உட்பட இருவர் கைது…..
சிலையை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை…….
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அருள்புரம் செந்தூரன் காலனி பகுதியில் உள்ள முருகன் கோவிலில் வைக்கப்பட்டிருந்த வெண்கலத்தினால் ஆன ஒரு அடி முருகன் சிலை காணாமல் போனதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து இது குறித்து பல்லடம் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று சிலை காணாமல் போனது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் போலீசார் மகாலட்சுமி நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே சந்தேகத்துக்கிடமாக வந்த இரண்டு பேரை நிறுத்தி விசாரித்ததில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்தவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் அவர்கள் உத்தர பிரதேசத்தை சேர்ந்த அங்கித் திவாரி 26 மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்தது. மேலும் இவர்கள் அருள்புரம் பகுதியில் உள்ள முருகன் கோவிலில் வைக்கப்பட்ட போராடி வெண்கல முருகன் சிலையை திருடியதும் தெரிய வந்தது. தொடர்ந்து இருவரையும் கைது செய்த பல்லடம் போலீசார் அவர்களிடமிருந்து 20 ஆயிரம் மதிப்புடைய சிலையை கைப்பற்றினர்.