கந்தர்வகோட்டை மார்ச் 22
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கட்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் சர்வதேச நீர் தினம் கடைபிடிக்கப்பட்டு நீரின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வக் கோட்டை ஒன்றிய செயலாளர் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா பேசும் பொழுது
உலக நீர் தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 ஆம் தேதி நன்னீர் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நன்னீர் வளங்களை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவதற்கான அழைப்பை ஏற்படுத்தவும் ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டாடப்படும் ஒரு உலகளாவிய தினமாகும் என பேசினார். முன்னதாக மாணவர்கள் நீரின் முக்கியத்துவம் குறித்து தெரிந்து கொண்டனர். நிறைவாக ஆங்கில ஆசிரியர் சிந்தியா ந்தியா நன்றி கூறினார்.