பஞ்சாப் மாநிலம், சண்டீகரில் எஸ்.கே.எம். (என்.பி.) விவசாய அமைப்பின் தேசிய, மாநில நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேசிய அளவில் விளைபொ ருள்களுக்கு குறைந்தபட்ச ஆத ரவு விலை நிர்ணயம் செய்வது குறித்து மத்திய அமைச்சர் களுடன் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்ட எஸ்.கே.எம். (என்.பி.) விவசாய அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜித் சிங்டல் லேவால், தமிழக ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் பஞ்சாப் மாநிலம், சண்டீ கரில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவர்களை உடன டியாக விடுவிக்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கி ணைப்புக் குழு மாநில கௌரவத் தலைவர் எம்.பி. ராமன் தலைமை வகித்தார். தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆதிமூலம், மாவட்டத் தலைவர் பொன். மணி கண்டன், இளைஞரணி தலை வர் அருண், மண்டலச் செயலர் மாணிக்கவாசகம், மாவட்ட நிர்வாகி அழகுசேர்வை ஆகியோர் பங்கேற்று, மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.