திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் வருடம் தோறும் பங்குனி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்று பாடைக் காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதேபோல் இவ்வாண்டு கடந்த 7- ஆம் தேதி வெள்ளிக் கிழமை பூச்சொரிதல் விழாவுடன் விழா தொடங்கியது, 9- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும்,16- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் காப்பு கட்டுதலும், அதனைத் தொடர்ந்து அன்று முதல் தினசரி அம்பாள் பல்வேறு வாகனங்களின் வீதி உலா காட்சி நடைபெறும்.

அன்று முதல் தினசரி இரவு கோவில் வளாகத்தில் இன்னிசை நிகழ்ச்சி, பட்டிமன்றம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. நேற்று 5- ஆம் நாள் விழாவை முன்னிட்டு மதியம் 12- மணி அளவில் அபிஷேக ஆராதனைகளும், மாலை 6:00 மணிக்கு யுவகலா பாரதி திருமதி எம். நந்தினி தேவி வழங்கும் தமிழினியாள் நுண் கலைக்கூடம் வழங்கும் பரதநாட்டிய நிகழ்ச்சியும், இரவு 7:00 மணிக்கு வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு பெரிதும் காரணம் ஆண்களா! பெண்களா! என்ற தலைப்பில் பாட்டு பட்டிமன்றம், நடுவர் சன் டிவி புகழ் அசத்தல் மன்னன் திருவிடைமருதூர் சண்முக கண்ணன், ஆண்களே என்ற தலைப்பில் இ. பிரபாகரன், சிவ கிருஷ்ணன், பெண்களே என்ற தலைப்பில் ஜே. ரம்யா, இரா. பிரித்தி ஆகியோர் பேசினார்கள். மதியம் அபிஷேக ஆராதனை, மாலை அம்பாள் வீதி உலா காட்சி, மாலை பரதநாட்டியம் நிகழ்ச்சி, பாட்டு பட்டிமன்றம் ஆகிய உபயதாரர்கள் வலங்கைமான் வர்த்தக சங்கத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

விழா ஏற்பாடுகளை வர்த்தக சங்கத் தலைவர் கே. குணசேகரன், செயலாளர் ராயல் கோ. திருநாவுக்கரசு, பொருளாளர் எஸ். புகழேந்தி, துணைத் தலைவர் என். மாரிமுத்து, இணை செயலாளர்கள் எஸ்.சிவசங்கரன், ஓய். யாகூப் சலீம் மற்றும் நிர்வாக குழுவினர், சங்க உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர். வருகின்ற 23-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை புகழ்பெற்ற பாடைக்காவடி திருவிழா நடைபெறுகிறது.

திருவிழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் கோ. கிருஷ்ணகுமார், தக்கார்/ ஆய்வர் க. மும்மூர்த்தி, ஆலய அலுவலக மேலாளர் தீ. சீனிவாசன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், மண்டகப்படிதாரர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Share this to your Friends