கந்தர்வகோட்டை மார்ச் 21.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் சர்வதேச வன தினத்தின் முன்னிட்டு மரக்கன்றுகள் நட்டு கடைபிடிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார்.
ஆங்கில ஆசிரியை சிந்தியா வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வக்கோட்டை ஒன்றிய செயலாளரும் , பட்டதாரி ஆசிரியர் ரஹ்மத்துல்லா சர்வதேச வன தினத்தை முன்னிட்டு பேசும்பொழுது
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை 2012 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதியை சர்வதேச வன தினமாக அறிவித்தது.
இந்த நாள் அனைத்து வகையான காடுகளின் முக்கியத்துவத்தைக் கொண்டாடி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு சர்வதேச வன தினத்திலும், மரங்கள் நடும் பிரச்சாரங்கள் போன்ற காடுகள் மற்றும் மரங்களை உள்ளடக்கிய நடவடிக்கைகளை ஒழுங்கமைக்க உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச முயற்சிகளை மேற்கொள்ள நாடுகள் ஊக்குவிக்கப்படுகின்றன என்று பேசினார். இந்நிகழ்வில் ஆசிரியர்கள் வெள்ளைச்சாமி ஜெம்ம ராகினி சகாய ஹில்டா, பெற்றோர்கள் சாகுல் அமீது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை நன்றி கூறினார்.
Leave a Reply