காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ஸ்ரீ யதோக்தகாரி பெருமாள் கோவில் பங்குனி மாதம் பிரம்மோத்சவம் தொடக்கம்


சின்ன காஞ்சிபுரம் ஸ்ரீ யதோக்தகாரி பெருமாள் கோவில் பங்குனி மாத பிரம்மோற்சவம் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது
சின்ன காஞ்சிபுரத்தில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற பெருமைக்குரிய கோவிலாக இருந்து வருவது ஸ்ரீ கோமளவல்லி தாயார் சமேத ஸ்ரீ யதோக்தகாரி பெருமாள் கோவில் பங்குனி மாதம் பிரம்மோத்ஸவம் தொடங்கியது இன்று காலை கொடியேற்றம் நடைபெற்றது

பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து சப்பரம் வாகனத்தில் திருக்கச்நம்பி தெரு.செட்டி தெரு. பெருமாள் கோவில் வரை சென்றது வழியங்களும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் வருகின்ற மார்ச் 24ஆம் தேதி காலை கருட சேவையும் மாலை அனுமந்த வாகனத்திலும் மார்ச் 28ஆம் தேதி திருதேரோட்டமும் நடைபெறுகிறது வரும் 30ஆம் தேதி தீர்த்தவாரி ஏப்ரல் 1ஆம் இரவு பூப்பல்லாக்கு உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அறங்காவலர் நல்லப்பன் நாராயணன் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்

Share this to your Friends