தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் அனைத்து மாணவர்களும் அகில இந்திய வானொலி நிலையமான மதுரை வானொலியில் பங்கேற்கும் பல்சுவை நிகழ்ச்சிகள் பள்ளிக்கே வந்து தேவகோட்டையிலேயே ஒலிபதிவு செய்யப்பட்டது.
மதுரை வானொலி நிலையத்திற்கு மாணவ,மாணவியர் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் ஆண்டுதோறும் சென்று நிகழ்ச்சி ஒலிப்பதிவு செய்வது வழக்கம். ஆனால் இந்த முறை வானொலி நிலையத்தின் புதிய முயற்சியாக பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் முத்துமீனாள் ,ஸ்ரீதர்,முத்துலெட்சுமி, ஆகியோர் மாணவர்களின் திறமைக்கு ஏற்ப பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களும் பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சிகளை தயாரித்தனர்.
மதுரை அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சி தயாரிப்பு அலுவலர் வேல்முருகன் மற்றும் பகுதி நேர அறிவிப்பாளர்கள் ஜெயப்ரியா மற்றும் நவநீத பாண்டியன் ஆகியோர் பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களும் தனி,தனியாக பங்கேற்ற நிகழ்ச்சிகளை ஒலி பதிவு செய்தனர்.
Leave a Reply