திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டித் தெரு ஸ்ரீ வேம்படி சீதளா தேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் கடந்த 16- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பங்குனி பெரும் திருவிழா நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், தீபாராதனையும் நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருப்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
விழாவினை ஊஞ்சல் உற்சவ உபயதாரர் வலங்கைமான் தவில் உலக சக்கரவர்த்தி தெய்வத்திரு வி. ஏ. சண்முகசுந்தரம் பிள்ளை & குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். வருகின்ற 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை புஷ்ப பல்லக்கு விழா நடைபெறுகிறது.
திருவிழா ஏற்பாடுகளை ஆலய தக்கார் கோ. கிருஷ்ணகுமார், ஆய்வாளர் க. மும்மூர்த்தி, வலங்கைமான் செட்டித் தெரு நிர்வாகிகள், செட்டித் தெரு வாசிகள், ஸ்ரீ சீதளா தேவி இளைஞர் நற்பணி மன்றம், மண்டகப்படி தாரர்கள் மற்றும் நகரவாசிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.
Leave a Reply