Advertisement

துறையூரில் பேருந்துகளில் ஏர்ஹாரன் அகற்றி அபராதம்

துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையத்தில் 20/03/2025 ந் தேதி பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலிப்பான்கள் (ஏர் ஹாரன் ) அகற்றி அபராதம் விதிக்கப்பட்டது.

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் இ.ஆ.ப., அறிவுறுத்தலின் பேரில் முசிறி காவல் உதவி கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார், துறையூர் காவல் ஆய்வாளர் முத்தையன் ஆகியோர்தலைமையில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் அப்துல்லா சாகிப் முன்னிலையில் துறையூர் பேருந்து நிலையத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட பேருந்து மற்றும் மினி பேருந்துகளில் ஒலிப்பான்கள் (ஏர்ஹாரன்) ஆய்வு செய்யப்பட்டது.

இதில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலிப்பான்கள் இருந்த சுமார் 20 பேருந்துகளில் ஏர் ஹாரன்களை அகற்றி அபராதம் விதிக்கப்பட்டது.இதில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பாரபட்சம் இன்றி அனைத்து பேருந்துகளிலும் இருந்த ஏர் ஹாரன்களை அகற்றி அந்தந்த பேருந்து சக்கரத்திலேயே வைத்து நசுக்கப்பட்டது.கடினமான ஒலிப்பான்களை பறிமுதல் செய்யப்பட்டது.இதில் உதவி காவல் ஆய்வாளர் ராஜேஷ்குமார்,போக்குவரத்து காவலர்கள் முனிராஜ்,விக்னேஷ், மருதமுத்து ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *