வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்
பெரம்பலூர் ரோவர் வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் உழவர் செயலி மற்றும் கலப்படங்களைக் கண்டறியும் முறைகள் பற்றி செயல் விளக்கம்
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கண்ணனூரில் தமிழ்நாடு நீர் வளத்துறை சார்பில் நீரினை பயன்படுத்துவோர் சங்க மேலாண்மை குழுக்களுக்கான இரண்டாம் கட்ட இரண்டு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி 18/03/2025 மற்றும் 19/03/2025 ஆகிய நாட்களில் நடைபெற்றது.
உதவி பொறியாளர் மோகன்ராஜ், அணி சேர்ப்பு மற்றும் பயிற்சி வல்லுநர்கள் பாண்டியராஜன், ஜெரால்டு ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, கள ஒருங்கிணைப்பாளர்கள் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் துறையூர் வட்டாரத்தில் ஊரக வேளாண் பணி அனுபவத்திற்காக பெரம்பலூர் தந்தை ரோவர் வேளாண்மை கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு மாணவர்கள் ரா.எழிலரசன்,வெ.கிரிதரன்,அ.ஹரிஷ்,க.ஞானசேகரன்,மு.ஹரிஷ்,பா.கோபி,க.ஹரிஷ்,அ.கமல்நாத்,ச.ஜகநாதன்,க.ஹர்வுத் ஆகியோர் கலந்து கொண்டு ஆடு வளர்ப்பில் ஆடுகளை தேர்வு செய்யும் முறை, வேளாண் இயந்திர மயமாக்கும் திட்டம், உழவர் செயலி, நெற்பயிரில் ஏற்படும் நோய்களின் அறிகுறிகள் மற்றும் கட்டுப்பாடு, பால், தேன் மற்றும் மிளகாய்த்தூளில் கலப்படங்களைக் கண்டறியும் முறை ஆகியவற்றைப் பற்றிய செயல் விளக்கத்தை அறிந்து கொண்டனர்.
Leave a Reply