கந்தர்வக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் உலக சிட்டுக்குருவி தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார்.சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார்.தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளரும், பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா உலக சிட்டுக்குருவி தினம் குறித்து பேசும் பொழுதுஒரு காலத்தில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற நிலப்பரப்புகளில் பொதுவாகக் காணப்பட்ட சிட்டுக்குருவிகள், மாசுபாடு, வாழ்விட இழப்பு மற்றும் நகரமயமாக்கல் காரணமாக குறைந்து வருகிறது.
நான் சிட்டுக்குருவிகள் நேசிக்கிறேன் என்ற கருப்பொருளைக் கொண்ட 2025 ஆம் ஆண்டு உலக சிட்டுக்குருவிகள் தினம், அவற்றின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. மரங்களை நடுதல், பூச்சிக்கொல்லி பயன்பாட்டைக் குறைத்தல் மற்றும் கூடு கட்டும் இடங்களை உருவாக்குதல் போன்ற எளிய வழிமுறைகள் அவற்றின் எண்ணிக்கையை மீட்டெடுக்கவும் பல்லுயிரியலைப் பாதுகாக்கவும் உதவும்.
உலக சிட்டுக்குருவிகளின் தினத்தை 2010 ஆம் ஆண்டு நேச்சர் புரோவர் என்ற பறவை அமைப்பு தொடங்கியது.
குறைந்து வரும் சிட்டுக்குருவிகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். இந்த நிகழ்வு 50 நாடுகளுக்கு பரவி உள்ளது. சிட்டுக்குருவிகளை பாதுகாப்பது
அதன் வீழ்ச்சியை கட்டுப்படுத்துவது என் நோக்கம் ஆகும். 2012 ஆம் ஆண்டு முதல் வீட்டு சிட்டுக்குருவி டெல்லி மாநில பறவையாக அறிவிக்கப்பட்டது. எல்லா இடங்களிலும் சிட்டுக்குருவியை பாதுகாக்க மக்கள் தினத்தை கொண்டாடி மகிழ்கிறார்கள் என்று பேசினார் .
இந்நிகழ்வில் வானவில் மன்ற கருத்தாளர் தெய்வீக செல்வி மாணவர்களுக்கு எளிய அறிவியல் பரிசோதனைகள் செய்து காண்பித்தார்.நிறைவாக ஆங்கில ஆசிரியர் சிந்தியா நன்றி கூறினார்.