தென்காசி
தென்காசி மாவட்டம் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் தென்காசி விடிஎஸ்ஆர் நிறுவனம் மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் மாவட்ட அளவிலான கல்லூரி மாணவிகளிடையே பல்வேறு போட்டிகள் நடந்தன
. நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார் முதல்வர் (பொ) கலா வென்சிலா வரவேற்றார் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு, விவசாயத்தை பாதுகாத்தல், நீர் மாசுபடுதலை தடுத்தல், வனப் பாதுகாப்பு , போதை விழிப்புணர்வு , உள்ளிட்டவைகள் குறித்து மாணவிகள் தத்ரூபமாக சிலையாக நின்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் இலஞ்சி பேரூராட்சி மன்ற தலைவி சின்னத்தாய், திமுக தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் சார்பில் ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தனர். இலஞ்சி பேரூராட்சி செயல் அலுவலர் குமார் பாண்டியன், விடிஎஸ்ஆர் இம்ரான் கான், ஆகியோர் கலந்து கொண்டனர்
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட முதன்மை அலுவலர் ரெஜினி, மாவட்ட கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினர்
Leave a Reply