தேனி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா மாவட்ட தலைநகரான தேனியில் பங்களா மேட்டில் அமைந்துள்ள தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவில் பராமரிப்புக் குழு சார்பில் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது
இந்த விழாவில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு யாக பூஜைகள் நடைபெற்றன திங்கட்கிழமை காலை மங்கள இசை ஸ்ரீ மஹா கணபதி பூஜை புண்யாக வாசனம் கோ பூஜை ஆச்சார்யா விஷேச சந்தி பூத சக்தியாக மண்டப ஆராதனம் அஸ்வ பூஜைகள் கன்யா பூஜை சுமங்கலி பூஜை அர்ச்சனை வேதி கார்ச்சனை நான்காம் காலம் யாக வேள்வி தீபாராதனை காட்டியும் பல்வேறு பூஜைகள் நடைபெற்றன
இதனை த் தொடர்ந்து பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டு புனித நீரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்ப கலசங்களுக்கு மேளதாளங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது இதையடுத்து விழாவில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டது
இந்த விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவரும் நாடார் சரஸ்வதி கல்வி குழும தலைவருமான கல்வித்தந்தை டி ராஜமோகன் தலைமை வகித்தார் உப தலைவர் பி.பி கணேஷ் பொதுச் செயலாளர் எம் எம் ஆனந்தவேல் பொருளாளர் எம் பழனியப்பன் செயலாளர்கள் என் இராமர் பாண்டியன் எம் ஏ புலேந்திரன் இணைச் செயலாளர்கள் ஏ ஏ. டி என் தாளமுத்து எஸ் பழனிவேல் முருகன் மற்றும் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் மற்றும் தேவஸ்தான நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள் அனைத்து நிறுவனங்களின் செயலாளர்கள் இணைச் செயலாளர்கள் அனைத்து பொது மகாசபைஉறுப்பினர்கள் மற்றும் இறையன்பர்கள் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் தேவஸ்தான நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
விழாவில் தேனி நகர் மற்றும் தேனி அல்லிநகரம் பழனிசெட்டிப்பட்டி பூதிப்புரம் வடபுதுப்பட்டி அன்னஞ்சி உள்ளிட்ட பல்வேறு தேனி நகரைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ மீனாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருள் பெற்றனர் கும்பாபிஷேகத்தை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் தேவஸ்தானம் ஸ்ரீ சிவாகாம ரத்னா வெ. கணேச சர்மா தலைமையிலான அர்ச்சகர்கள் கும்பாபிஷேகத்தை மிக ச்சிறப்பாக நடத்தினார்கள் விழா ஏற்பாடுகளை தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவில் பராமரிப்புக் குழுவின் நிர்வாகிகள் வெகு சிறப்பாக செய்திருந்தனர் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சுமார் 50,000 பக்தர்களுக்கு அறுசுவை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.
Leave a Reply