கோவையில் ஜெகன்னாத் குழுமங்கள் சார்பாக நீர் மோர் பந்தல் துவக்கம்
இரு வேறு இடங்களில் அமைக்கப்பட்டதை மாநகராட்சி ஆணையர் ரிப்பன் வெட்டி துவக்கி வைப்பு கோவையில் ஜெகன்னாத் டெக்ஸ்டைல் நிறுவனம் மற்றும் ஜெகன்னாத் பிராப்பர்டீஸ் சார்பாக இரு வேறு இடங்களில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை மாநகராட்சி ஆணையர் சிவ குரு பிரபாகரன் திறந்து வைத்தார்..
சுட்டெரிக்கும் கோடை வெப்பத்தில் இருந்து காத்து கொள்ள தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்..
மேலும் பொதுமக்கள் கோடை வெயிலின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்..
இந்நிலையில் கோடை காலத்தில் வெளியில் வரும் பொதுமக்கள் தாகம் தீர்க்கும் விதமாக கோவையில், ஜெகன்னாத் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ஜெகன்னாத் பிராப்பர்ட்டீஸ் சார்பில் நீர், மோர் குடில்கள் துவங்கப்பட்டுள்ளன..
கோடை வெயிலின் உச்சத்தில் நீர்ச்சத்தினை தக்கவைத்து கொள்வதற்கு பாதசாரிகளுக்கு குளிர்ச்சியான மற்றும் சுவையான நீர் மோர் மற்றும் குடிநீர் வழங்குவதை கடந்த பல ஆண்டுகளாக சேவையாக செய்து வரும் நிலையில், இந்த ஆண்டு கோவை கோவை ஆர்.எஸ்.புரம் அன்னபூரணி கோவில் அருகில் ஒரு நீர், மோர் குடில் மற்றும் ஆர்.எஸ்.புரம்,குமாரசாமி ஏரிக்கு அருகில் ஒரு நீர் மோர் குடில் என இரண்டு நீர் மோர் பந்தல்களை அமைத்துள்ளனர்..
இந்நிலையில் இதற்கான துவக்க விழா ஜெகன்னாத் டெக்ஸ்டைல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரமேஷ் குமார் திபர்வால் தலைமையில் நடைபெற்றது..
இதில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் கலநரது கொண்டு நீர் மோர் பந்தல்களை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர் வழங்கினார்..
கோடையின் கடுமையான வெப்பத்தால் மக்களின் நலன் கருதி அவர்களின் தாகம் தீர்க்கும் விதமாக ஜெகன்னாத் குழுமங்களின் இந்த சேவையை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்…
Leave a Reply