செய்தியாளர்: பா. சீனிவாசன் வந்தவாசி.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் பழந்தமிழர் அறிவியல் திறம் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் எஸ்.ருக்மணி தலைமை தாங்கினார். கல்லூரி தலைவர் மு.ரமணன், செயலாளர் வி.பிரியா ரமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி தமிழ்த்துறை தலைவர் ஞான மலர் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, சென்னை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன முனைவர் பட்ட மேலாய்வாளர் எ.பூபாலன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். பழந்தமிழரின் அறிவியல் திறன் சார்ந்த கருத்துக்களையும், அறிவியல் சார்ந்த சாதனைகள் பற்றியும் விளக்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்துறை பேராசிரியர்கள் கிருஷ்ண குமார், எழிலரசி உள்ளிட்ட மாணவிகள் பங்கேற்றனர்.
Leave a Reply