பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன்
பாபநாசம் ஆர்.டி.பி கல்லூரியில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி…
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஆர் டி பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கல்லூரி தாளாளர் எம்.ஏ.தாவூத் பாட்ஷா தலைமையில் நடைபெற்றது.
விழாவில் கும்பகோணம் அல்அமீன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி தாளாளர் முகமது ரஃபி தஞ்சாவூர் மகாராஜா சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் முகமது ரஃபி சென்னை இஸ்லாமிய அமைப்பாளர் அப்துல் பாஸித் புகாரி சென்னை குடியேற்ற பணியகம் உதவி மத்திய புலனாய்வு அதிகாரி பிச்சை முத்து கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
இந்நிகழ்ச்சியில் அனைத்து ஜமாத்தார்களும் கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்களும் ,கல்லூரி பேராசிரியர்களும் , பெற்றோர்களும் ,மாணவிகளும் லயன்ஸ் கிளப் , ரோட்டரி கிளப் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
Leave a Reply